Our Feeds


Saturday, July 16, 2022

SHAHNI RAMEES

மேலும் 7 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்


 இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இலங்கையில் இருந்து 109 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து வவுனியா மாவட்டம் செட்டிக்குளத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (40) அவரது மனைவி ராஜகுமாரி (36), குழந்தைகள் குமரன் (13), வசி (10) மேலும் செட்டிக்குளத்தைச் சேர்ந்த குமரன் (38), அவரது மனைவி வதினி (30), அவர்களது குழந்தை பவின்யா (06) ஆகிய 7 பேர் இலங்கையில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடை பகுதியில் நேற்று (15) மாலை சென்றடைந்தனர்.

தகவல் அறிந்து தனுஷ்கோடிக்குச் சென்ற மரைன் பொலிஸார் மணல் தீடையில் இருந்த 7 இலங்கைத் தமிழர்களை கடலோர காவல்படையின் ஃஹேவர் கிராஃப்ட் படகு மூலம் தனுஷ்கோடி கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம் கடரோல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைக்கு பிறகு 7 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இவர்களுடன் தமிழகத்திற்கு வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »