Our Feeds


Monday, July 18, 2022

SHAHNI RAMEES

இன்றும் 3 மணிநேர மின்வெட்டு..!

 


நாடளாவிய ரீதியில் இன்று (18) 3 மணிநேர

மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும், இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பிற்பகல் 1 மணி முதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியிலேயே குறித்த சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணி நேரமும், CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் காலை 8.30 மணிவரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »