தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஷ் அலி உள்ளிட்ட 21 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வசந்த முதலிகே, ஜோசப் ஸ்டாலின், லஹிரு வீரசேகர, எரங்க குணசேகர மற்றும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.