Our Feeds


Thursday, July 28, 2022

SHAHNI RAMEES

கடலில் மூழ்கி காணாமல்போன 16 வயது பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு..!

 

கடலலையில் சிக்கி இழுத்துச் செல்லபட்டு காணாமல்போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.



இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

3 மாணவர்கள் பெரியதம்பிரான் ஆலய உற்சவ இறுதி நாளான அன்று தீர்த்தம் உற்சவத்தில் நீராடச் சென்ற போது கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.



இந்நிலையில் இரு மாணவர்கள் உயிர் தப்பிய நிலையில் கரை சேர்ந்ததுடன் மற்றுமொரு மாணவன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போனார்.

இவ்வாறு காணாமல்போன பெரியநீலாவணையைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இராசநாயகம் சனுஜன் என்ற மாணவனின் சடலம் நேற்று புதன்கிழமை (27) மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஷ்ஃரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மரண விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »