தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பாதுகாப்பற்ற முறையிலும் அனுமதி இன்றியும் கொண்டு செல்லப்பட்ட 1,500 லீற்றர் டீசல் நிரப்பப்பட்ட 15 பீப்பாய்களுடன் இருவரை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பரிமாற்று பொலிஸ் பிரிவின் ஹம்பாந்தோட்டை பகுதி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்துக்கிடமான இந்த லொறியை இன்று (28) அதிகாலை 3.30 மணியளவில் சோதனையிட்டபோது, வளர்ப்பு மீன்களை ஏற்றிச் செல்வது என்ற போர்வையில் டீசல் கடத்தப்பட்டது.
குறித்த டீசல் ஹம்பாந்தோட்டையிலிருந்து நீர்கொழும்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டவிருந்ததாகவும் சந்தேக நபர்கள் கொச்சிக்கடை மற்றும் நாரம்மல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.