வெல்லவாய - கொட்டவெஹெரகல பிரதேசத்தில் 11 வயதுடைய சிறுவன் ஒருவன், வன விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட சட்டவிரோத மின் வேலி சிக்கி, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று மதியம் குறித்த மாணவர் அயல் வீட்டுக்குச் செல்லும்போது, மின்கம்பியில் சிக்கியுள்ளார்.
மின்சாரம் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மின்சார வேலியை பொருத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.