ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான
இறுதிப் போர்’ எனக் கூறப்படும் ஓகஸ்ட் 09ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில், கட்சியின் பிரதித் தலைவர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள போதிலும், அதில் பங்கேற்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி, தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர்; ஓகஸ்ட் 09ம் திகதி எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்கும் எந்த முடிவிலும் கட்சி அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சரத் பொன்சேகாவிடம் கேட்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊழல் அரசியல்வாதிகளை ஆட்சியில் இருந்து அகற்றி ஊழல் அற்ற அனைவரையும் உள்ளடக்கிய புதிய நிர்வாகத்தை அமைப்பதற்கான இறுதிப் போருக்கு அழைப்பு விடுத்துள்ள ஓகஸ்ட் 09ம் திகதி போராட்ட இளைஞர்களுடன் இணைந்து – மாபெரும் போராட்டத்தில் தானும் தனது கட்சியும் பங்கேற்கவுள்ளதாக ஜூலை 27 அன்று நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் தெரிவித்திருந்தார்.