Our Feeds


Tuesday, July 26, 2022

SHAHNI RAMEES

ராஜிதவுக்கு எதிரான 08 கப்பல் இறக்குமதி வழக்கு வாபஸ்..!

 

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கைக்கு 08 கப்பல்களை இறக்குமதி செய்தமை மற்றும் மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தமை தொடர்பான வழக்கை குற்றப் புலனாய்வு திணைக்களம்  வாபஸ் பெற்றுள்ளதாக  கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று (25) அறிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு ராஜித எம்.பிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருப்பதால், குறித்த நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவதாக சீ.ஐ.டியினர் அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைக்கு இன்று (25) வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய டொன் லலித் அனுராத செனவிரத்னவின் பெயரில் கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சீன நிறுவனம் ஒன்றுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த 08 கப்பல்கள் கொண்டுவரப்ப்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் சீ.ஐ.டியில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »