சுது அப்பச்சி உங்களை கும்பிட்டுக் கேட்கிறோம். நாளை காலையில் உங்களிடமிருந்து நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம். இனி போதும். எனவும்,
இந்நாட்டை பாதுகாத்தவர்களில் நீங்களும் ஒருவர் இப்போது எமது பிள்ளைகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நாட்டை முன்னேற்றுவதற்கு எங்களுக்கு வாய்ப்புத் தாருங்கள். எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பொதுமக்கள் அவருடைய முகத்திலேயே கூறியமை ஊடக கெமராக்களில் பதிவாகியுள்ளது.