நாடாளுமன்றம் செல்லும் வழியில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது இன்றும் (06) கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று முதல் நாடாளுமன்ற வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது அப்பகுதியில் மீண்டும் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.