நிட்டம்புவ பகுதியில் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியிலிருந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.