ஐக்கிய அரபு இராச்சியத்தின் புதிய ஜனாதிபதியாக ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏழு அமீரகங்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட பெடரல் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினர்களால் ஷேக் மொஹமட் பின் சயீத் நல் நஹ்யான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியான ஷேக் கலீஃபா பின் சையீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் நேற்று காலமானார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவ்வாறு ஷேக் மொஹமட் பின் சயீத் நல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.