நாளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பகிஷ்கரிப்பில் (ஹர்த்தால்) இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) ஊழியர்கள் மற்றம் ரயில் நிலைய அதிபர்களும் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கம் பதவி விலக வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை (06) நாடளாவிய ரீதியிலான ஹர்த்தாலுக்கு பெரும் எண்ணிக்கையான தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த ஹர்த்தாலில், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களையும் பங்குபற்றுமாறு அகில இலங்கை போக்கவர்தது ஊழியர்கள் சங்கம் (ACTWU) கோரியுள்ளது.
தனியார் பஸ்கள் இன்று இரவு முதல் சேவையில் ஈடுபட மாட்டா என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளைய ஹர்த்தாலில் தாமும் பங்குபற்றவுள்ளதாக இலங்கை ரயில்நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று இரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் பணியில் ஈடபட மாட்டார்கள் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.