வெள்ளவத்தை- இராமகிருஷ்ணா வீதிக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்ணெண்ணெய் கோரி காலி வீதியை மறித்து குறித்த தரப்பினர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.