ஆப்கானிஸ்தான், மாலி, நைகர் ஆகிய நாடுகளில் இன்று ( மே -1 ) நோன்புப் பெருநாள் கொண்டாடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள மூன்று
நாடுகள் இன்று (மே 1) ஈத் அல் பித்ரின் முதல் நாளைக் கொண்டாடுகின்றன,
அதே நேரத்தில் சவூதி மற்றும் முஸ்லிம் உலகின் பெரும்பாலான நாடுகள் மே 2 ஐ ஷவ்வால் முதல் நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் ஷவ்வால் நிலவு காணப்படுவதாகவும், எனவே ஈத் அல் பித்ர் மே 1 ஆம் தேதி கொண்டாடப்படும் என்றும் ஆப்கானிஸ்தானின் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை அறிவித்தது.
ஃபரா, கஸினி, காந்தஹார், கோர் ஆகிய மாகாணங்களில் 27 பேர் பிறை பார்த்ததாகவும், அதற்கான ஆதாரங்களை கமிட்டியிடம் சமர்ப்பித்ததாகவும் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது