முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்கான பாதுகாப்பை (MSD) தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தரப்பினராலும் தற்போது அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னாள் அமைச்சர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படுவதாகவும் அதனை கருத்திற் கொண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்ந்தும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது முன்னாள் அமைச்சர்களின் வீடுகளை தாக்குவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்தால் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக மோதல் தடுப்பு பொலிஸ் குழுக்களை தயார் நிலையில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் தேவைப்பட்டால் இராணுவத்தினரின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது