(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் ஜனநாயகமானது, அமைதியானது என நீதிமன்றம் பல முறை உறுதிப்படுத்தியுள்ளது. எக்காரணத்துக்காக அவரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
மக்களுக்கு எதிரான அடக்குமுறையை ஜனாதிபதி தவிர்த்துக்கொள்ள வேண்டும் இல்லாவிடின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். சர்வாதிகார ஆட்சியாளர்களின் இறுதி நிலைமை என்னவாயிற்று என்பதை ஜனாதிபதி மீட்டுப்பார்க்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது பதவியை பாதுகாத்துக் கொண்டு பிரதமர் உட்பட அமைச்சரவையை பதவி விலக்க தீர்மானித்துள்ளார். நாட்டு மக்கள் தன்னை பதவி விலகுமாறு தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் வலியுறுத்தி வருவதை ஜனாதிபதி அறியாமல் இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.