கொழும்பு கோட்டை மத்திய பஸ் தரப்பிடத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு போதுமான பஸ்கள் சேவையில் ஈடுபடாததன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
நேற்றிரவு (12) முதல் மக்கள் பஸ் தரிப்பிடங்களில் தங்கியிருந்ததோடு, இன்று காலை 9 மணியளவில் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.