காலி முகத்திடல் – கோட்டாகோகமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவில், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்தனர்.
மே மாதம் 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மே மாதம் 9 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என பொலிஸார் அறிவித்தனர்.
அவ்வாறு பொதுமக்கள் ஒன்றுகூடுவார்களாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.