7 மணித்தியாலங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று பல ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
களுத்துறை தெற்கில் இருந்து வெயாங்கொடை வரை மாத்திரம் சில ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் குறுகிய தூர பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில பஸ்களை மாத்திரம் அங்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.