பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் பொது வீதிகளில், புகையிரத கடவைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்கள் மற்றும் கடலோரங்களில் ஒன்றுகூடுவதற்கோ அல்லது உலாவுவதற்கோ முழுமையாக தடை விதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.