Our Feeds


Monday, May 16, 2022

ShortNews Admin

GOTA GO GAMA வை தாக்க வந்தவர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு செயலாளரே உத்தரவிட்டார் - JVP பகிரங்க குற்றச்சாட்டு



கொழும்பு அலரிமாளிகையில் இருந்து கொழும்பு கோட்டாகோகமவிற்கு வந்த வன்முறையாளர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு செயலாளரே பணிப்புரை விடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியில் இருக்கும்போதே, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் அர்த்தமில்லை. அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு விசாரணை நடத்த வேண்டும்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரே.

கோட்டாகோகமவை தாக்கியவர்களை கைது செய்யும் நோக்கில் அடுத்தடுத்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »