பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகுவதாகவும், நாளை இது தொடர்பில் அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், “இலங்கையின் அடுத்த பிரதமர் யார்?” என்ற கேள்வி தற்போது பெரும் பேசுபொருளாக உள்ளது.
பிரதமர் பதவிக்கு இதுவரை யாருடைய பெயரும் பரிந்துரைக்கப்படாத நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய பிரதமரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், பெண் ஒருவரை அடுத்த பிரதமராக நியமிக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் ட்ரூசிலோனுக்கு தெரிவித்துள்ளன.
அதிலும், தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத பெண் ஒருவரை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்க்கட்சிகளின் இந்த திட்டம் வெற்றி பெற்று, குறித்த பெண்மணி பிரதமராக பதவியேற்றால், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்குப் பின் இலங்கையின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெறுமையை இவர் பெறுவார்.
இதேவேளை, பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிதலைவர் சஜித் பிரேமதாசவிடம், ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை சஜித் நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.