மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய பிரதமராக ஐ.தே.க வின் தலைவர் ரனில் விக்கிரமசிங்க பதவியேற்பார் என கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரனில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார, எரான், கயந்த, தலதா அத்துக்கோரல உள்ளிட்ட 20 முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பின்னியில் தான் நேற்றைய தினம் ஹரீன் பெர்ணான்டோ தான் SJB யிலிருந்து விலகி சுயாதீனமாக செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளதாக அறியவருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
இரண்டு நாட்களுக்கு முன் சஜித்தை சந்தித்து நீண்டநேரம் பேசிய ஹரீன், இப்போதுள்ள நிலையை விளக்கி நாட்டின் நன்மை கருதி இடைக்கால அரசை எடுங்கள் என்று கெஞ்சாத குறையாக கேட்டாராம்..
சரி என்று ஹரீனிடம் பதிலளித்த சஜித், நேற்று மீண்டும் பழைய நிபந்தனைகளை விதித்து ஜனாதிபதியுடனான பேச்சை தொடர்ந்துகொண்டிருந்தாராம்...
அதனால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடே ஹரீனின் இந்த முடிவு... ஹரீனுடன் மேலும் பலர் இந்த முடிவை எடுப்பார்கள் போலத் தெரிகிறது..
இப்போது, ரணில் பிரதமராக வரப்போகிறார் என்ற செய்தி வந்த கையோடு, ஏற்கனவே விதித்த நிபந்தனைகளை தளர்த்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புகிறார் சஜித்...
மறுபுறம் ரணிலை விரும்பாத மைத்ரிபாலவோ, டலஸ், நிமல் சிறிபால, விஜயதாச ஆகியோரின் பெயர்களை பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளாராம்.
எது என்ன நடந்தாலும் இன்று பெரும்பாலும் ரனில் விக்கிரமசிங்க பிரதமராக பொறுப்பேற்பதுடன் சஜித் தரப்பிலிருந்து வரும் முக்கியஸ்தர்களுடன் ஆளும் தரப்பின் ஆதரவுடன் ரனில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பார் எனத் தெரிகிறது.
ரனில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டால் சஜித் பிரேமதாசவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோகும் நிலை ஏற்படும்.
இதே வேலை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோரும் ரனிலுடன் கூட்டு சேர்ந்து புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
தனியொருவன் ரனில்...!