ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் நிபந்தனையுடன் பங்கேற்பதற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெற்ற முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஷ்வரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து, அந்தப் பதவிக்கு அவர் தற்போதைய நிலையில் பொருத்தமானவர் என்றும், ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் வாக்களிப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும் விக்னேஷ்வரன் ஏற்கனவே ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ரணில் அரசாங்கத்தில் எந்தவித அமைச்சர் பதவிகளையும் எடுப்பதில்லை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.