அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள 22 சந்தேக நபர்கள் இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற நியாயமான சந்தேகம் உள்ளதா என மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை சட்டமா அதிபருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.