பாதுகாப்பு காரணங்களுக்காகவே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.