கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளதாக குணபால ரத்னசேகர அறிவித்துள்ளார்.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை வெளியிட்டுள்ளார்.