அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முதலில் வாகனங்கள் அகற்றப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்கள் மற்றும் பதாதைகளும் அகற்றப்பட்டுள்ளன.
எனினும் கூடாரத்தை அகற்றினாலும் தமது “மைனா கோ கம” போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்தனர்.
இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் சகல கட்டமைப்புக்களையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.