நாட்டின் பல பாகங்களிலும், எரிபொருள், காஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்தனர். இன்னும் நின்றுகொண்டுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில், வத்தளையில் புதிதாக வரிசையொன்றில் மக்கள் இன்றிரவு நின்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.
கொழும்பு உள்ளிட்ட பெரும் நகரங்களிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள், இரவு நேர உணவாக மாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே உண்பர். அதிலும் பெரும்பாலும் பாண் வாங்கிக்கொள்வர்.
அந்த வகையில், பாண் கொள்வனவுக்காக, வத்தளையில் மக்கள் வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.