பிரதி சபாநாயகராக நேற்றைய தினம் தெரிவு
செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிடிய, மீண்டும் குறித்த பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.இது தொடர்பிலான அவரது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் பிரதி சபாநாயகர் பதவிக்காக போட்டியிட்ட அவர் 148 வாக்குகளை பெற்றிருந்தார்.
இதற்கு முன்னதாக, பிரதி சபாநாயகராக செயற்பட்ட கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சியம்பலாபிடிய இரு வாரங்களுக்கு முன்னதாக பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அவரது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 4 நாட்களுக்கு முன்னதாகவே ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.