தம்மைச் சந்திப்பதற்கு எந்தவொரு அரசியல்வாதியையும் இனி அனுமதிக்கப்போவதில்லை என சியம் நிகாயாவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
தற்காலிக இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது உட்பட ஆறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எவரும் சாதகமாக பதிலளிக்காத காரணத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு பிரேரணைகள் அடங்கிய ஆவணத்தை மாநாயக்க தேரர்களிடம் சமர்பிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டிக்கு வந்திருந்த போது, மல்வத்தை மகாநாயக்கர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
அவர் அஸ்கிரிய பீடாதிபதியை மாத்திரம் சந்தித்து உரிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.