Our Feeds


Wednesday, May 11, 2022

ShortNews Admin

BREAKING: டீசல் இல்லை… மீண்டும் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் - மின்சார சபை பொறியியலாளர் சங்கம்



நாட்டில் எரிபொருள் தீர்ந்து வருவதனால் மின்வெட்டை நீடிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து சுமார் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் எரங்க குடாஹேவா தெரிவித்தார்.

அதற்கமைய பகல் வேளைகளில் 5 மணித்தியாலங்களும், இரவில் இரண்டரை மணி நேரமும் மின்தடை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எரிபொருள் விநியோகம் முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், மே 7ஆம் திகதியுடன் டீசல் கையிருப்பில் இல்லையெனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »