Our Feeds


Friday, May 6, 2022

SHAHNI RAMEES

#BREAKING: இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!

 

 


 பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத்

தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த உறுதிமொழி ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில் பிரதமர் பதவி விலகி புதிய அமைச்சரவை அமையவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளார். ஆனால் பிரதமர் பதவி விலகுவதால் பிரச்சினை தீராது என்று அமைச்சர்கள் எடுத்துக்கூறியபோதும் ஜனாதிபதி ஏற்கவில்லை.

‘ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து பதவிகளை இராஜினாமா செய்வதில் அர்த்தமில்லை’ என்று பிரதமர் கூறியபோதும் அதனை ஏற்காத ஜனாதிபதி, இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டிற்கு முக்கியத்துவமளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதென்றும், அதன்பின்னர் புதிய அமைச்சரவையை திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நியமிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

( பிரதமர் பதவி விலகுவதாக முன்னர் பல தடவைகள் செய்திகள் வெளிவந்து ,பின்னர் பிரதமர் அலுவலகம் அவற்றை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது..)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »