நாடாளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர் தெரிவாகியுள்ளார்.
அஜித் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவுக்கு ஆதரவாக 78 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
மேலும், 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பு அவசியமில்லை எனவும், அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதை புறக்கணிப்பதாக ஆளுங்கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 அரசியல் கட்சிகளின் எம்.பிக்கள் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.