பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.
அலரிமாளிகை முன்பாகவும் காலிமுகத்திடலிலும் ஆர்ப்பாடட்டங்களில் ஈடுபட்டவர்களைத் தாக்கினார்கள் எள்ற சந்தேகத்தில் இவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை தொடர்பில் கைது செய்யபட்ட 4 சந்தேக நபர்களில் இருவர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.