காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இதனையடுத்து, தற்போது குறித்த பகுதிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க அவசர விஜயமொன்றை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.