ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் வீட்டின் மீதும் பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை, பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டதுடன், புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த நிஷாந்தவின் வீடு முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.