Our Feeds


Tuesday, May 3, 2022

Anonymous

BREAKING: அரசியலிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தினர் விலக வேண்டும் என 89.6 % மக்கள் விருப்பம் - ஜனாதிபதி கோட்டா பதவி விலக 87.3 சதவீதமானோர் விருப்பம்.

 



இலங்கை மக்களிடையே நடைபெற்ற கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்ய வேண்டும் என 89.7 சதவீதமானோர் தெரவித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்ய வேண்டும் என 87.3 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.


96 சதவீதம் பேர் எல்லா கட்சி அரசியல்வாதிகளின் சொத்துகளை ஆய்வு செய்து, கணக்கில் காட்டாத சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நெருக்கநிலை குறித்து  மாற்று கொள்கைக்கான நிலையம் (Centre for Policy Alternatives – CPA)  இக்கருத்துக் கணிப்பை நடத்தியது. ஏப்ரல் 19 ஆம் திகதிக்கும் 25 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில், 88 சதவீதம் பேர் தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவரோ சமையல் வாயு, பெற்றோல், டீசல், பால்மா, உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற நீண்ட வரிசையில் நின்றதாகத் தெரிவித்தனர்.




90 சதவீதமானோர்  தங்கள் வருமானமோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினரின் வருமானமோ பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினர்.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றில் தானோ அல்லது தமது குடும்ப அங்கத்தவர் ஒருவரோ பங்குபற்றியதாக 48 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.




தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபஜய ராஜபக்ஷ அரசாங்கமே காரணம் 62 சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரத்துக்கு பின்னர் வந்த அனைத்து அரசாங்கங்களின் தவாறான பொருளாதார முகாமைத்துவம் காரணம் என 14.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நாட்டின் ஊழல் கலாசாரம் காரணம் என 14.4 சதவீதமானோர் கூறியுள்ளனர்.




கொவிட்19 பரவலே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என 4.4 சதவீதமானோர் கூறினர். உலகின் பொருளாதார நிலையே இந்நிலைமைக்கு காரணம் என 2.0 சதவீதமானோர் கூறியுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்ய வேண்டும் என 89.7 சதவீதமானோர் தெரவித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்ய வேண்டும் என 87.3 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ஷ குடும்பம், இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும் என 89.6 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

58 சதவீதம் பேர் நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு நீண்ட காலம் ஆகும் எனத் தெரிவித்துள்னர். 14 சதவீதம் பேர் சிறிது காலம் ஆகும் என்றும், 2 சதவீதம் பேர் விரைவிலேயே பொருளாதாரம் மீண்டெழும் என்றும் கருத்து தெரிவித்தனர்.




பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என்று தெரியாது என்று 26 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அரசியல்வாதிகளின் சொத்துகளை ஆய்வு செய்து, கணக்கில் காட்டாத சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என 96 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என 74 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.




தற்போதைய பிரச்சினைகளிலிருந்து நாடு மீளும் வரை அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு 73.7 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பிரச்சினைகளிலிருந்து நாடு மீளும் வரை நிபுணர்கள் அடங்கிய பேரவை ஒன்றினால் நாடு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதற்கு 82.4 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

20 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என 73.6 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் விலக வேண்டும் என 55.9 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர். (Metro News)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »