அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரிடம் நாளை (18) குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, ரோஹித அபேகுணவர்தன, சிபி ரத்நாயக்க மற்றும் இந்திக அனுருத்த ஆகியோரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளனர்.