(எம்.எப்.எம்.பஸீர்)
மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டாத 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று, இரு வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வந்த நிலையிலேயே இன்று (04) மாவனெல்லை நீதிவான் தம்மிக ஹேமபால இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன் மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிவான், விசாரணைகள் நிறைவடையாத 10 பேரின் விளக்கமறியல் வைக்கப்பட்டதுடன் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி வரையில் வழக்கை ஒத்தி வைத்தார்.