மே 9 மற்றும் அதற்குப் பிந்திய தினங்களில் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக தாக்குதல்கள், தீவைப்புக்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் ஒரு வாரத்துக்குள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட குழுவொன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நாடளாவிய ரீதியில் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.