புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று பதவியேற்பார்கள் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 4 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துள்ள நிலையில் மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை அமைச்சரவை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நான்கு அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.