கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.