கொழும்பு மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் உள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு வலியுறுத்தி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஷெனால் ஜயசேகர மற்றும் சமூக ஆர்வலர் ஹேமந்த விதானகே ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இதன் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.