ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்றுடன் (08) ஒரு மாதம் நிறைவடைகிறது.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று (07) இரவு காலி முகத்திடலில் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.
காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பொதுமக்கள் போராட்டம் ஏப்ரல் 8 ஆம் திகதி ஆரம்பமானது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மினுவாங்கொடையில் இருந்து சக்கர நாற்காலியில் வந்த மாற்றுத்திறனாளி போர்வீரர் நேற்று போராட்ட இடத்தை வந்தடைந்துள்ளார்.
அங்கவீனமுற்ற போர்வீரர்கள் தங்கியிருந்த இடத்தில் நேற்றிரவு ´அருநெல்லே பஹன´ எனும் தீபம் ஏற்றப்பட்டதுடன், போராட்டம் முடியும் வரை அதனை ஏற்றி வைக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.