குறிப்பிட்ட காலத்திற்குள் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு, முன்னாள் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான 5 விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
அரச வருவாயை அதிகரிப்பதற்கும், செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கும், அந்நிய செலாவணியை முகாமைத்துவம் செய்வதற்கும் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டுமென அந்தக் கடிதத்தில் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்.