பத்தரமுல்லை - பொல்துவை சந்தியில் நாடாளுமன்ற வளாக நுழைவாயில் வீதியை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடுவெல நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழையும் பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு செல்லும் பிரதான வீதி இன்று காலை வீதித்தடைகளால் மறிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவ்விடத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இன்று காலை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு பின்னாலுள்ள மாதிவெல நுழைவாயிலை பயன்படுத்தினர்.