தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைகள் காரணமாக
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்..நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் அவர்களது வசிப்பிடங்களை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரை சபாநாயகர் கேடடக் கொண்டுள்ளார்.