ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உருவச்சிலையில், அவரின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சில தமிழ் அடிப்படைவாதிகளே செயற்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
காலி முகத்திடல் வளாகத்திலுள்ள பண்டாரநாயக்கவின் சிலை அகற்றப்பட வேண்டும் என தமிழ் காடியனில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பண்டாரநாயக்கவின் கண்கள், கறுப்பு துணியால் கட்டப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் போராட்டத்துக்கு நாம் ஆதரவு. எனினும், அதற்குள்ளும் சில தமிழ் அடிப்படைவாதிகள் தமது நிகழ்ச்சி நிரலை திணிப்பதற்கு முற்படுகினறனர். இது தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும். இச்சம்பவத்தை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.
அத்துடன், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அடுத்தவாரம் முடிவெடுக்கப்படும்.” – என்றார்.